மகன்களுக்கு மொட்டை போட்டு திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்...!

Published : Feb 05, 2026, 12:41 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய மனைவி ஆர்த்தி, மகன்கள் மற்றும் மகளுடன் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
14
Sivakarthikeyan Visit Tiruchendur

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் பேமிலியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

24
ஹிட் அடித்த பராசக்தி

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த பராசக்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். மேலும் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருந்தார். அவருக்கு இது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

34
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ன?

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுதவிர தாய்க்கிழவி படத்தின் இயக்குனர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அது அவரின் 26-வது படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அப்படத்தின் அறிவிப்பு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆக உள்ளதாம்.

44
ரிலீசுக்கு ரெடியாகும் தாய்க்கிழவி

சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரிப்பில் தற்போது தாய்க்கிழவி என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. தாய்க்கிழவி வாரா என்கிற அப்பாடலை சிவகார்த்திகேயன் தான் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories