Don Update : டாக்டர் மிஸ் பண்ண தேதியில் டான் படத்தை களமிறக்கும் சிவகார்த்திகேயன் - அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

First Published | Jan 28, 2022, 1:23 PM IST

சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம், கடந்த ஆண்டுரிலீசாகி, ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, இதுவரை சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்த படங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது. 

இதுதவிர அயலான், டான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவற்றுள் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், டான் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை வருகிற மார்ச் மாதம் 25-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே தேதியில் கடந்தாண்டு டாக்டர் படத்தை வெளியிட இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் மற்றும் தேர்தல் காரணமாக அந்த தேதியில் டாக்டர் படம் ரிலீசாகாமல் போனது. 

தற்போது அதே தேதியில் டான் படத்தை களமிறக்குகிறார் சிவகார்த்திகேயன். அந்த தேதியில் அப்படி என்ன ஸ்பெஷல் என ரசிகர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos

click me!