அமரன் படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ரோலில் நடித்து வெளியான படம் தான் மதராஸி. அது என்னவோ சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே வெளியான படங்களில் டைட்டில் ஹிட் கொடுத்து வரும் நிலையில் அர்ஜூனின் மதராஸி பட டைட்டிலில் இப்போது அவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையப்படுத்திய மதராஸி படத்தை இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
24
துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான் டா
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற சலம்பல என்ற பாடலும், வழியிறேன் என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.
34
சிவகார்த்திகேயன் மதராஸி டிரைலர் ரிலீஸ்
இந்த நிலையில் தான் தற்போது சென்னை சாய்ராம் கல்லூரியில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் மதராஸி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரகு என்ற ரோலில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ஒரு கமாண்டோவாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இந்தப் படத்தின் டிரைலர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
44
ஏ ஆர் முருகதாஸ் மதராஸி டிரைலர்
இதில், சமீபத்தில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுக்க, நீங்கள் இதை விட வேறு எதோ ஒரு முக்கியமான வேலையாக செல்கிறீர்கள். நீங்கள் அதை பாருங்கள் என்று கோட் படத்தில் சிவகார்த்திகேயன் டயலாக் பேசுவதை மையப்படுத்தி இந்தப் படத்திலும் டயலாக் வைக்கப்பட்டுள்ளது. அதில், வித்யுத் தான் அந்த டயலாக்கை பேசுகிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான் டா என்று டயலாக் பேசுகிறார். இது சிவகார்த்திகேயனின் கையில் விஜய் கொடுத்த துப்பாக்கி வசனத்தை மையப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் மதராஸி டிரைலர் வெளியாகி 30 நிமிடங்களுக்குள்ளாக ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.