காம வெறியர்களை கேட்கவில்லை... மகளிர் தின வாழ்த்து சொன்ன வைரமுத்துவை கவிதை நடையில் விளாசிய சின்மயி

Published : Mar 09, 2023, 08:40 AM IST

மகளிர் தினத்திற்காக வாழ்த்து தெரிவித்து கவிதை ஒன்றை பதிவிட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார் சின்மயி.

PREV
14
காம வெறியர்களை கேட்கவில்லை... மகளிர் தின வாழ்த்து சொன்ன வைரமுத்துவை கவிதை நடையில் விளாசிய சின்மயி

உலகம் முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்துவும் கவிதை நடையில் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

24

அந்த பதிவில், 
“மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்

உலக மகளிர் திருநாள் வாழ்த்து” என குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... சார்பட்டா 2-வுக்கு போட்டியாக... ‘வட சென்னை 2’ படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன் - எப்போ ஆரம்பம்?

34

வைரமுத்துவின் இந்த மகளிர் தின வாழ்த்தை பார்த்து டென்ஷன் ஆன பாடகி சின்மயி, கவிதை நடையிலேயே அவருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டதாவது : “அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். 

44

இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சுதந்திரம் குறித்தும் பேசுகிறார். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என சின்மயி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சின்மயியின் இந்த பதிலடி டுவிட் வைரலாகி வருகிறது. பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு எதிராக மீடூ புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு போன் கால்... ரூ.1 லட்சம் குளோஸ்! நேக்கா பேசி நடிகை நக்மாவிடம் பணத்தை அபேஸ் பண்ணிய மோசடி கும்பல்

click me!

Recommended Stories