Maanaadu Collection: மாஸ் காட்டும் 'மாநாடு' வசூல்! ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? வாயடைத்து போன திரையுலகம்..

Published : Dec 02, 2021, 04:32 PM IST

எவ்வித விடுமுறையும் இல்லாத நாட்களில் வெளியானாலும், வசூலில் மாஸ் காட்டி வருகிறது சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் (maanaadu movie). தற்போது ஒரே வாரத்தில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி திரையுலகினரை வாயடைத்து போக செய்துள்ளது.  

PREV
18
Maanaadu Collection: மாஸ் காட்டும் 'மாநாடு' வசூல்! ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? வாயடைத்து போன திரையுலகம்..

கொரோனா பிரச்சனைக்கு பின் தமிழில் வெளியான மாஸ்டர் படம் தான் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது. இதை தொடர்ந்து 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானாலும், நல்ல வசூலை குவித்ததது தனுஷின் 'கர்ணன்', பின்னர் தீபாவளிக்கு வந்த 'அண்ணாத்த' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கெத்து காட்டியது.

 

28

இதை தொடர்ந்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

 

38

தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

48

வெங்கட் பிரபு படங்களின் சாயல் இந்த படங்களில் தெரிந்தாலும், அவை அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.

 

58

எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது.  இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.  

 

68

முதல் நாள் இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 முதல் 8 கோடி வரை 'மாநாடு' படம் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாள் வசூலிலும் கெத்து காட்டியுள்ளது. இரண்டே நாட்களில் சுமார் 15 கோடி வசூலித்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகார பூர்வமாக தெரிவித்திருந்தார்.

 

78

தற்போது இடையில் சனி - ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்ததால், தற்போது ஒரே வாரத்தில் மாநாடு திரைப்படம் சுமார் 50 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

88

ஏற்கனவே 'மாநாடு' படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வரும், படக்குழுவினர் ஒரே வாரத்தில் மாநாடு 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததையும் கொண்டாடி வருகிறார்கள். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சிம்புவின் இந்த படத்திற்கு இப்படி பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!

Recommended Stories