மிகப்பெரிய எதிர்பாப்புகளுக்கு மத்தியில் சிம்பு நடித்து வரும், 'மாநாடு' படத்தில், இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார்.
மேலும் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு... 'மாநாடு' படத்தின் டீசர், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆகிய 5 மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசரை பார்த்த, நெட்டிசன்கள் பலர்... கடந்த 2008ம் ஆண்டு, ஹாலிவுட் திரையுலகில் வெளியான வாண்டேஜ் பாயிண்ட், என்கிற, அரசியல் ஆக்ஷன் திரில்லர் படத்தின் காப்பியை போல் உள்ளதாக கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் இது எந்த ஒரு படத்தின் காப்பியும் இல்லை என படக்குழு இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது.