Shriya Sharma : சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்த நடிகை ஸ்ரேயா சர்மா தற்போது சினிமாவை விட்டு விலகி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
'சில்லுனு ஒரு காதல்' படத்தோட அந்த க்யூட் குழந்தை நட்சத்திரம்... இப்போ பவர்ஃபுல் கார்ப்பரேட் லாயர்! நடிகை ஸ்ரேயா சர்மாவோட லேட்டஸ்ட் அவதாரத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்காங்க. சினிமா உலகிற்கு ஒவ்வொரு வருஷமும் நூற்றுக்கணக்கான குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகுறாங்க. ஆனா, அதுல சிலர் மட்டும்தான் மக்கள் மனசுல நீங்காத இடம் பிடிப்பாங்க. அந்த லிஸ்ட்ல முக்கியமான ஒரு பெயர் ஸ்ரேயா சர்மா. சுமார் பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி, தன்னோட க்யூட்டான சிரிப்பு, அருமையான நடிப்பால ரசிகர்களைக் கவர்ந்த இந்த சின்னப் பொண்ணு இப்போ எங்க இருக்காங்க? என்ன பண்றாங்க? இந்த ஸ்டோரியில பாருங்க.
24
ஸ்ரேயா சர்மாவை ஞாபகம் இருக்கா?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்ரேயா சர்மாவை உடனே ஞாபகப்படுத்துறது 2006-ல் ரிலீஸான 'சில்லுனு ஒரு காதல்' படம்தான். இந்தப் படத்துல சூர்யா - ஜோதிகா ஜோடியின் மகளா ஸ்ரேயா நடிச்ச விதம் இன்னைக்கும் பலரோட மனசுல இருக்கு. அவங்களோட சுட்டித்தனமான நடிப்புக்கு தமிழ் ரசிகர்கள் ஃபேன் ஆனாங்க. ஆனா, அவங்க சினிமா பயணம் தெலுங்குலதான் ஆரம்பிச்சது. மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிச்ச 'ஜெய் சிரஞ்சீவா' படத்துல, அவரோட அண்ணன் மகளா நடிச்சுதான் தன்னோட கேரியரை ஸ்ரேயா தொடங்கினாங்க.
சின்ன சின்ன படங்கள்ல மட்டும் இல்லாம, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட 'ரோபோ', ராம் சரணின் 'மகதீரா', ஜூனியர் என்.டி.ஆரின் 'ஊசரவள்ளி' மாதிரியான பிரம்மாண்டப் படங்கள்லயும் ஸ்ரேயா முக்கியமான ரோல்கள்ல நடிச்சிருக்காங்க. இதுமட்டுமில்லாம, சுமார் 150-க்கும் அதிகமான டிவி விளம்பரங்கள்லயும் நடிச்சு, அப்போ எல்லாருக்கும் பரிச்சயமான முகமா இருந்தாங்க.
34
வழக்கறிஞர் ஆன ஸ்ரேயா
குழந்தை நட்சத்திரமா பெரிய வெற்றி பெற்ற ஸ்ரேயா சர்மா, வளர்ந்ததும் ஹீரோயினாகவும் ஒரு கை பார்க்கலாம்னு முயற்சி செஞ்சாங்க. 2015-ல் 'காயகுடு', 2016-ல் 'நிர்மலா கான்வென்ட்' படங்கள் மூலமா ஹீரோயினா அறிமுகமானாங்க. ஹீரோயினா பார்க்க அழகா இருந்தாலும், குழந்தை நட்சத்திரமா கிடைச்ச அந்த பெரிய பேரும் புகழும் ஹீரோயினா அவங்களுக்கு கிடைக்கல. இதனால ஸ்ரேயா ஒரு உறுதியான முடிவெடுத்தாங்க.
நிறைய நடிகைகள் வாய்ப்பு இல்லைனா என்ன பண்றதுன்னு தெரியாம இருப்பாங்க. ஆனா ஸ்ரேயா அப்படி இல்ல. படிப்புல எப்பவுமே டாப்பா இருந்த அவங்க, சினிமாவுக்கு குட்பை சொல்லிட்டு படிப்புல கவனம் செலுத்தினாங்க. சட்டப் படிப்பை முடிச்சு, இன்னைக்கு மும்பையில ஒரு வெற்றிகரமான 'கார்ப்பரேட் வழக்கறிஞரா' இருக்காங்க. பெரிய பெரிய கம்பெனிகளோட சட்ட விவகாரங்களைக் கையாளற முக்கியமான பதவியில ஜொலிக்கிறாங்க.
சினிமால இருந்து விலகி இருந்தாலும், சோஷியல் மீடியாவுல செம ஆக்டிவா இருக்காங்க ஸ்ரேயா. அவங்களோட இன்ஸ்டாகிராம் போட்டோக்களைப் பார்க்குற ரசிகர்கள், "நம்ம பார்த்த அந்த சின்னப் பொண்ணா இது? இவ்வளவு வளர்ந்துட்டாங்களே!"-னு ஆச்சரியப்படுறாங்க. தன்னோட வக்கீல் வேலை சம்பந்தமான அழகான தருணங்களையும் ரசிகர்களோட பகிர்ந்துக்கிறாங்க.
மொத்தத்துல, ஒரு காலத்துல கேமரா முன்னாடி நடிச்ச அந்த சின்ன கைகள், இன்னைக்கு சட்டப் புத்தகங்களை வெச்சு வாதாடுது. சினிமா மட்டும் வாழ்க்கை இல்லை, வேற துறையிலயும் சாதிக்கலாம்னு நிரூபிச்சிருக்கிற ஸ்ரேயா சர்மாவோட இந்தப் பயணம், நிஜமாவே பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சிருக்கு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.