பிரபல நடிகர் மாடியில் இருந்து விழுந்து மரணம்..! பயிற்சியின் போது ஏற்பட்ட சோகம்..!

First Published | Jan 23, 2021, 4:46 PM IST

பிரபல நடிகர் மாடியில் இருந்து விழுந்து மரணம்..! பயிற்சியின் போது ஏற்பட்ட சோகம்..!
 

'சில்லு கருப்பட்டி' படத்தில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீராம், தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர், ஹலிதா ஷமீம் எழுதி இயக்கி இருந்த திரைப்படம் 'சில்லுக்கருப்பட்டி'. நான்கு வித்தியாசமான கதைகளை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், நடிகர் சமுத்திரக்கனி, சுனைனா, நிவேதிதா, பேபி சாரா, மற்றும் நடிகர் ஸ்ரீராம் ஆகிய பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
Tap to resize

இந்த படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலையும் அள்ளியது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்ரீராம், தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தப் படத்தில் வயதான தாத்தாவாக நடித்திருந்த ஸ்ரீராம் இன்று எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரபல நடிகர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள தகவல் திரையுலகினர் மத்திய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!