தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘Signal At 11:30’ நாளை (நவம்பர் 27) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பும், வெளியிடப்பட்ட போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘Signal At 11:30’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஏற்கெனவே வெளியாகி கவனம் பெற்றுள்ளது. சென்னையின் OMR பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட கதைக்களமாகும். இரவு 11:30 மணிக்கு ஒரு போக்குவரத்து சிக்னலில் நடைபெறும் சந்திப்பு, அதனைத் தொடர்ந்து உருவாகும் மர்மம், எதிர்பாராத திருப்பங்கள், காதல் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்ட உளவியல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
ஒரு மருத்துவர் மற்றும் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் நபர் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகரும் இந்தக் கதையில், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள் அதிகாலை வரை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதே படத்தின் கதைக்களத்தின் சுவாரஸ்யமான அம்சமாகத் தெரிகிறது.