பிரபல நடிகர் நிதின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா உறுதி..! பீதியில் குடும்பத்தினர்..

First Published | Aug 10, 2020, 12:31 PM IST

நடிகர் நிதின் - ஷாலினி திருமணம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடந்து முடித்த நிலையில், இவருடைய திருமணத்தில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிதின் குடுபத்தினர் பீதியில் உள்ளனர்.
 

தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன்.
சமீபத்தில் வெங்கு குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்த பீஷ்மா என்ற காமெடி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
Tap to resize

தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நிதின் தன்னுடைய காதலி ஷாலினியை, ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
அதன்படி இவர்களுடைய திருமணம் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் நடந்து முடித்து.
இவர்களுடைய திருமணம் வேற லெவலில் கற்பனை செய்யப்பட்டாலும், கொரோனாவால்... அதிக பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், உறவினர்கள் முன்பு நடந்து முடித்து.
இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நிதின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், பீதியில் உள்ளனர்
மேலும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அனைவரையும் தவறாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.

Latest Videos

click me!