என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்! அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் நடிகை!

First Published Mar 20, 2021, 5:26 PM IST

2019ஆம் ஆண்டு வெளியான 'காஞ்சனா 3 ' படத்தில் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
undefined
மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபல பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான்.
undefined
இவரை தொடர்ந்து, காஞ்சனா பட நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான பிரபல நடிகை நிக்கி தம்போலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
undefined
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா 3 படத்தில், வேதிகா,ஓவியா மற்றும் நிக்கி தம்போலி ஆகிய மூவர் கதாநாயகியாக நடித்திருந்தனர்.
undefined
நிக்கி தம்போலி தான் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இன்று காலை தான் தனக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதையடுத்து தற்போது தன்னைத்தானே வீட்டில் படுத்துக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
undefined
மருத்துவர்களின் ஆலோசனைகள் தற்போது உரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமடைவேன் எதிர்பார்ப்பதாகவும், ரசிகர்கள் அன்புக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
undefined
மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள் என்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார். நிக்கி தம்போலி, சமீபத்தில் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னராக அறிவிக்க பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!