Dhanush Divorce : தனுஷ் விஷயத்தில் சிம்புவ ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?.... நெட்டிசன்களை வறுத்தெடுத்த ஷகீலா

First Published | Jan 20, 2022, 12:25 PM IST

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை ஷகீலா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் விவாகரத்து முடிவை அறிவித்தது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். இருவரும் விவாகரத்துக்கான காரணங்களை தெரிவிக்காததால், அது என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். 

அவர்களின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து நடிகை ஷகீலா கூறியதாவது: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றது, அவர்களுடைய பர்சனல் விஷயம். அவர்களே அதை தெளிவாக அறிவிச்சிட்டாங்க. அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையில் ஏன் தேவையில்லாம மூக்கை நுழைக்குறீங்க. 

Tap to resize

இதே மாதிரி தான் சமந்தாவுக்கு டைவர்ஸ் ஆனப்போ அவரைப் பற்றி தவறாக சொன்னீங்க. அதைப்பார்த்து அவருக்கு மனம் எவ்வளவு ரணமாக இருந்திருக்கும். அதனால் தான் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். உங்க வீட்டில யாருக்காச்சும் டைவர்ஸ் ஆச்சுனா இப்படித்தான் பேசுவீங்களா?.

தனுஷோட குழந்தைகள பத்தி நீங்க கவலைப்படாதீங்க. உங்கள் குழந்தைகளை முதல்ல நல்லா பாத்துக்கோங்க. மற்றவர்களை பற்றி அப்புறம் யோசிங்க. அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என எதுவுமே தெரியாமல் நீங்களா ஒன்னு பேசாதீங்க. 

இவர்களுக்கு மத்தியில் சிம்புவை ஏன் தேவையில்லாம இழுக்குறீங்க? அவர் பற்றி ஏன் இப்ப பேசுறீங்க. சூப்பர் ஸ்டாரும் ஒரு மனிதர் தான். தன்னுடைய மகள் என்பதால் அவருக்கு எப்படி வயிறு எரியும். இதையெல்லாம் நினைச்சு பார்க்காம எப்படி உங்களால் இஷ்டத்துக்கு பேச முடியுது? என சரமாரியாக சாடியுள்ளார் ஷகீலா.

Latest Videos

click me!