'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னரும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இருப்பினும் இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால்... புகழ் வெளிச்சம் தேடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அந்நிகழ்ச்சி இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் வெற்றிபெறாவிட்டாலும், ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதன் பலனாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றிய யாஷிகா... மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், ஜீவனின் பாம்பாட்டம் ஆகிய படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வந்த யாஷிகாவிற்கு கடந்த ஆண்டு படு மோசமான ஒன்றாக அமைந்தது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா, 4 மாதங்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரே மீண்டு வந்தார்.
தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ள யாஷிகா, கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அந்த வகையில், தற்போது வொண்டர் உமன் கெட்-அப்பில் நடிகை யாஷிகா நடத்தி உள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
நீல நிற சேலையில், கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் போஸ் கொடுத்து நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.