நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான சேயோன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதைபற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயனின் 26வது படம் சேயோன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், சேயோன் படம் மூலம் அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கி வருகிறார். இவர் இயக்கிய முதல் படமான தாய்கிழவி இம்மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார். தாய்கிழவி படம் பார்த்து இம்பிரஸ் ஆனதால் சேயோன் படத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார் எஸ்.கே.
24
சிவகார்த்திகேயனின் சேயோன்
சேயோன் திரைப்படம் மூலம் மீண்டும் கிராமத்து நாயகனாக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் கிராமத்து நாயகனாக கலக்கி இருந்த சிவகார்த்திகேயன், அதன்பின்னர் டிராக் மாறி புதுப்புது கதையம்சம் கொண்ட படங்களை நோக்கி நகர்ந்துவிட்டார். இதனால் அவர் மீண்டும் கிராமத்து சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார் எஸ்.கே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
34
சேயோன் எப்போ ரிலீஸ்?
சேயோன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன்மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இப்படத்திற்கு விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுவென முடித்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் 41வது பிறந்தநாளுக்காக சேயோன் படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் சாமியாடியபடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அவரைப் பார்த்து பக்தியில் இன்ஸ்பெக்டரே கும்பிடும் படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விருமாண்டி வந்திருப்பதாக கூறி மாஸ் காட்டி இருக்கிறார். என்னை ரசிப்பவர்களுக்காக, என்னை நேசிப்பவர்களுக்காக, என்னைவிட என்னைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களுக்காக, என்னுடைய ரசிகர்களுக்காக, என் சகோதர சகோதரிகளுக்காக, சூரசம்பவம் லோடிங் என குறிப்பிட்டு சேயோன் கிளிம்ப்ஸ் வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.