வாவ் செம க்யூட்..முதல்முறையாக குழந்தையுடன் பாக்கியலட்சுமி நடிகை...மீண்டும் பிட்டான ஜெனிஃபர்..

First Published Jan 8, 2022, 6:37 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமியில் முன்பு ராதிகாவாக நடித்தவர் நடிகை ஜெனிஃபர். இவர் தனது குழந்தயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

jenniferr

பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகள் நடிகை ஜெனிஃபர். பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தின் மூலம் ஹீரோயின்  அறிமுகமான ஜெனீஃபர் ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

jenniferr

இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிய ஜெனிஃபர்  பல ரசிகர்களை கவர்ந்தார்.  அதற்கு பிறகு 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

jenniferr

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த ஜெனிஃபர் மீண்டும் கடந்த 2013 ல் ரீ என்ட்ரி கொடுக்கையில் தனது உண்மையான பெயரான  ஜெனிஃபர்  பெயரிலேயே  சினிமாவில் நடித்து வந்தார்,. 

jenniferr

சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்தார். இதைத்தொடர்ந்து விஜய் டீவி சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜெனிஃபர் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார்.

jenniferr

இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், இவர் சமீபத்தில் திடீர் என இந்த சீரியலை விட்டு விலகினார். தற்போது ஜெனிபர் இந்த சீரியலில் இருந்து விலகியதால்... அவருக்கு பதிலாக, பிக்பாஸ் பிரபலமான... ரேஷ்மா நடித்து வருகிறார். 

jenniferr

தான் ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகியதாக அவரே விளக்கம் அளித்திருந்தார். பின்னர்  கர்ப்ப கால ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். சமீபத்தில் கர்ப்பகாலத்தில்  தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் - மனைவி எடுத்துக் கொண்ட ஃபோட்டோ செம வைரலானது.

jenniferr

பின்னர் ஜெனிஃபருக்கு வளைகாப்பில் கணவருடன் சேர்ந்து நடனமாடியிருந்தார்.அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை ஜெனிஃபர் பகிர்ந்து வருகிறார்.

jenniferr

சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தாயான ஜெனிஃபர். மீண்டும் தனது பழைய அழகுக்கு திரும்பியுள்ள புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார். இந்நிலையில் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஜெனிஃபர்.

click me!