யாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் "பிறந்தநாள் என்னை ஒருபோதும் உற்சாகப்படுத்தியதில்லை.. ஆனால் என்னை சுற்றி இருக்கும் மகிழ்ச்சி, குறிப்பாக என் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் இருக்கும் போது அது என்னை உற்சாகப்படுத்துகின்றது. உங்களின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.