அடுத்த அவதாரம் எடுக்கிறாரா லெஜெண்ட் சரவணன்..! தீயாய் பரவும் தகவல்..!

First Published | Apr 20, 2021, 8:14 PM IST

சரவணா ஸ்டார் அண்ணாச்சி சரவணன், வெள்ளித்திரையில் கால் பதித்து முதல் முறையாக நடித்தும், தயாரித்தும் வரும் படங்களை தொடர்ந்து, புதிய தகவல் ஒன்று தற்போது தீயாக பரவி வருகிறது. 
 

விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். இந்த பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தலா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில் 'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ள படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார் சரவணன்.
Tap to resize

கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். முதல் நாளே அதிரடி காட்சிகளில் தூள் கிளப்பிய சரவணன், பின்னர் குலுமணாலி, மற்றும் சென்னையில் சில காட்சிகள் செட் போட்டும் எடுக்கப்பட்டது.
குறிப்பாக சரவணனுடன் சேர்ந்தே பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் இந்த படத்தில் நடித்துள்ளார். எனவே இதுவே விவேக்கிற்கு கடைசி படமாகவும் அமைந்துள்ளது.
அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை ஊர்வசி ரௌட்டாலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிப்பது மட்டும் இன்றி, தயாரிக்கவும் செய்கிறார் லெஜெண்ட் சரவணன்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தை அடுத்து... இவருக்கு நடிக்க சில பட வாய்ப்புகள் தேடி வந்தாலும், இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக, படங்களை தயாரிக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!