Dhanush movie : மீண்டும் இணையும் ரகிட... ரகிடா காம்போ! ராக்கி டைரக்டருடன் தனுஷ் இணையும் படத்தின் மாஸ் அப்டேட்

Ganesh A   | Asianet News
Published : Dec 29, 2021, 03:40 PM IST

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் தனுஷ்.

PREV
16
Dhanush movie : மீண்டும் இணையும் ரகிட... ரகிடா காம்போ! ராக்கி டைரக்டருடன் தனுஷ் இணையும் படத்தின் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். 

26

ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

36

எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். 

46

தற்போது இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களும், தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகி உள்ளார்.

56

இதுதவிர சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்தில் அவர் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

66

இந்நிலையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனுஷின் வட சென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன் தற்போது 4-வது முறையாக தனுஷுடன் இணைய உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories