அமீகானுக்கு இரவு பார்ட்டி வைத்த நாகார்ஜுனா குடும்பம்..!! மீண்டும் சர்ச்சை பேச்சுக்கு இடம் கொடுத்த சமந்தா..!!

Published : Sep 26, 2021, 11:31 AM ISTUpdated : Sep 26, 2021, 11:34 AM IST

அமீர்கான் (Amirkhan) ஹைதராபாத் வந்த போது, நாகர்ஜுனா (Nagarjuna) குடும்பத்தினர் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். இதில் சமந்தா (Samantha) கலந்து கொள்ளாதது மீண்டும் சர்ச்சை பேச்சுகளுக்கு இடம் கொடுத்துள்ளது.  

PREV
19
அமீகானுக்கு இரவு பார்ட்டி வைத்த நாகார்ஜுனா குடும்பம்..!! மீண்டும் சர்ச்சை பேச்சுக்கு இடம் கொடுத்த சமந்தா..!!

ஏற்கனவே சமந்தா - நாக சைதன்யா (Naga Chaitanya) விவாகரத்து விவகாரம் ஒரு பக்கம் காட்டு தீ போல், பற்றி கொண்டு எரியும் சமயத்தில், மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சமந்தா நடந்து கொண்டுள்ளார்.

 

29

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து வதந்தி குறித்த விவகாரம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து கணவன் - மனைவி இருவருமே அமைதி காத்து வருவதால் இந்த வதந்திகள், விவாகரத்துக்கு சமந்தா ஜீவனாம்சம் கேட்டது வரை சென்று விட்டது என கூறலாம்.

 

39

மேலும் சமந்தா ஹிந்தியில் நடித்த 'தி பேமிலி மேன் 2 ' வெப் தொடரில் நடித்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் சில தகவல்கள் வெளியானது. எனினும் இந்த வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, சில பாலிவுட் வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டியதால், மும்பை செல்ல இவர் திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா அவருடைய தந்தையுடன் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

 

49

அதே போல் சமந்தா கடந்த மாதம் அவருடைய மாமனார் நாகார்ஜுனாவின் (Nagarjuna ) பிறந்தநாள் பார்ட்டியில் மிஸ் ஆனது, இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருந்தது.

 

59

சமந்தா சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியா தர்ஷன், மற்றும் த்ரிஷா கலந்து கொண்ட பார்ட்டியில் நாக சைதன்யா மிஸ் ஆனார். திருப்பதி கோவிலுக்கு வந்த இவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், மிகவும் காட்டமாக புத்தி இருக்கா என கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

69

இந்நிலையில் முதல் முறையாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, விவாகரத்து குறித்த வதந்திக்கு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதில், நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன்.

 

79

சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக பேசப்படும், முந்தையநாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதே நிறுத்தி விட்டேன்’ என்று கூறியிருந்தார்.

 

89

இந்நிலையில் மீண்டும் சமந்தா, தன்னுடைய மாமனார் வைத்த பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். சமீபத்தில் அமீர்கான் தனது படத்தின் பிரமோஷன் ஒன்றிற்கு, ஹைதராபாத் வந்தார். அமீர்கான் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பதால் அமீர்கானுக்கு நாகார்ஜுனா இரவு விருந்து வைக்க விரும்பினார். இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் பிரமாண்ட இரவு பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

99

இந்த விருந்தில் நாகார்ஜுனா குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்ட நிலையில் சமந்தா மட்டும் கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிய போகிறார்கள் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவிவரும் நிலையில் நாகார்ஜுனா குடும்பத்தினர் வைத்த இந்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளாதது பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

click me!

Recommended Stories