சூர்யா, சிம்புவை தொடர்ந்து SK படத்தையும் தட்டிதூக்கிய சாய் அபயங்கர்; அவர் கைவசம் இத்தனை படங்களா?

Published : Jul 03, 2025, 12:18 PM IST

அனிருத்தை போல் கோலிவுட்டில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இசையமைப்பாளர் என்றால் அது சாய் அபயங்கர் தான். அவர் கைவசம் உள்ள படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Sai Abhyankkar Movie Line Up

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது இசையமைப்பாளர்கள் கோலோச்சிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் 1980களில் இளையராஜா உச்சத்தில் இருந்தார். இதையடுத்து 1990களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உச்சம் தொட்டார். அதேபோல் 2000க்கு பின் ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய இசையால் கவனம் ஈர்த்தார். பின்னர் 2010ல் இருந்து அனிருத் ஆளுமை செலுத்தினார். அந்த வரிசையில் 2025-ல் கோலிவுட்டில் மிகவும் பிசியான இசையமைப்பாளர் என்றால் அது சாய் அபயங்கர் தான். அவர் இசையமைப்பில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை ஆனால் அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளனர்.

25
யார் இந்த சாய் அபயங்கர்?

தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி ஜோடியின் ஒரே மகன் தான் இந்த சாய் அபயங்கர். இவர் ஆசை கூட, கச்சி சேர போன்ற ஆல்பம் பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த ஆல்பம் பாடல்கள் தான் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது. இவர் இசையமைப்பாளர் அனிருத்திடமும் புரோகிராமராக பணியாற்றி இருக்கிறார். தேவரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி போன்ற படங்களிலும் அனிருத் குழுவில் இணைந்து பணியாற்றி இருக்கிறார் சாய் அபயங்கர்.

35
சாய் அபயங்கர் கைவசம் உள்ள படங்கள்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கைவசம் தற்போது பென்ஸ் திரைப்படம் உள்ளது. இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்திற்கு சாய் தான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க முதன்முதலில் ஏ.ஆர்.ரகுமான் தான் கமிட் ஆனார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் சாய் ஒப்பந்தம் ஆனார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அநேகமாக சாய் அபயங்கரின் முதல் படமாக இது அமைய வாய்ப்பு உள்ளது.

45
சாய் அபயங்கருக்கு குவியும் பட வாய்ப்பு

இதுதவிர பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரும் டியூடு திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசை. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படமும் தீபாவளிக்கு தான் திரைக்கு வர உள்ளது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கைவசம் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் உள்ளது. அதுதான் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் சுமார் 700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சாய் தான் இசையமைக்கிறார். மேலும் சிம்பு - பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு இசையமைப்பாளராக கமிட் ஆனார் சாய் அபயங்கர்.

55
சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

சாய் அபயங்கரின் கைவசம் தற்போது லேட்டஸ்டாக வந்துள்ள படம் தான் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.24 திரைப்படம். இப்படத்தை குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்க உள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories