விஜய் சேதுபதியின் ரீல் மகளை அறிமுகம் செய்த ஜியோ ஹாட் ஸ்டார் – ஹார்ட் பீட் இளம் வயது ரதியாக எண்ட்ரி!

Published : Jul 30, 2025, 08:47 PM IST

Sachana Namidass in Heart Beat 2 Tamil Web Series : ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸில் ரதியின் இளம் வயது ரதியாக பிக் பாஸ் பிரபலம் சாச்சனா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
17
ஹார்ட் பீட் 2 இந்த வார எபிசோடுகள்

Sachana Namidass in Heart Beat 2 Tamil Web Series : சினிமாவில் எந்தளவிற்கு படங்களுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே போன்று வெப் சீரிஸ்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதில், ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும் ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸ்க்கு இளம் ரசிகர்களிடையே குறிப்பாக 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

27
அனுமோல், தீபா பாலு, ஹார்ட் பீட் 2

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும் வெப் சீரிஸ்களில் ஒன்றுதான் ஹார்ட் பீட் 2 (Heart Beat Season 2). ரசிகர்களின் ஃபேவரைட்டும் கூட. இதில் வரும் ரதி, ரீனா, அர்ஜூன், ரவி, நவீன், அமையா, ராக்கி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை மிகப் பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீசன் 1 வெற்றிக்கரமாக முடிவடைந்து ஹார்ட் பீட் சீசன் 2 டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. கதைப்படி ரதி தான் ரீனாவின் நிஜ அம்மா என ஆர் கே ஆஸ்பிட்டல் முழுவதும் தெரியும்.

37
ஜியோ ஹாட்ஸ்டார் மெடிக்கல் டிராமா வெப் சீரிஸ்

ரீனா தனது மகள் என்பதும் கூட ரதிக்கு மட்டுமின்றி அவர் தான் தனது பேத்தி என்பது கூட ரதியின் அப்பா தியாகராஜனுக்கும் தெரியும். ஆனால், அப்பா யார்? ஏன் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்றார்கள்? என்ன நடந்தது என்பது தான் இப்போது ரீனாவின் கேள்வி மட்டுமின்றி ரசிகர்களின் கேள்வியாகவும், அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

47
ஜியோ ஹாட்ஸ்டார் ஹாட் பீட் வெப் சீரிஸ் சீசன் 2

இந்த நிலையில் தான் கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் ரதியின் முன்னாள் காதலன் யார் என்ற அறிமுகம் கிடைத்தது. அதோடு ரீனாவின் அப்பா யார் என்பதற்கும் ரசிகர்களுக்கு விடை கிடைத்துவிட்டது. ஆனால், என்ன நடந்தது, ஏன் அவர் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டார் என்பதற்கான காரணங்கள் இனி வரும் எபிசோடுகளில் நமக்கு தெரியும்.

57
ஹார்ட் பீட் சீசன் 2

இதற்காக பிளாஷ்பேக் காட்சிகளும் இந்த வார எபிசோடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி என்றால், ரதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இளம் வயது ரதியாக தனது வாழ்க்கையில் நடந்த காட்சிகளை தத்ரூபமாக வெளிக்காட்ட இருக்கிறார். இது குறித்து ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளது.

67
ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸ்

இதற்கு முன்னதாக சாச்சனா விஜய் சேதுபதி நடிப்பில் வந்த மகாராஜா படத்தில் அவரது மகளாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்று நண்பன் ஒருவன் வந்த பிறகு, மகாநடி, ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

77
சாச்சனா நேமிதாஸ் - ஹார்ட் பீட் 2

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை வியாழக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படும் ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸ்களில் என்ன காட்சிகள் இடம் பெற்றுள்ளன, என்ன நடக்கிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories