Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிவனாண்டி நான் ஜெயித்தால் உங்கள் அனைவருக்கும் குவாட்டர் தருவேன் என்று கூற அதை வைத்து சாமுண்டீஸ்வரி வாக்கு சேகரிக்கிறார்.
Karthigai Deepam 2 Serial Today Episode : நாளுக்கு நாள் சீரியல் மீதான ஆர்வமும், ஆசையும் அதிகரித்த வண்ணம் உள்ளது, சன் டிவி, விஜய் டிவி, ஜீ5 டிவி என்று ஒவ்வொரு சேனல்களிலும் ரேட்டிங்கை பிடிக்க ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிலேயும், ஒரு சீரியலானது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்து இப்போது 2ஆவது சீசனை தொடங்கி ஒளிபரப்பு செய்து வருகிறது.
25
சிவனாண்டி - சாமுண்டீஸ்வரி சவால்
பொதுவாக சீரியல்களில் சினிமாவைப் போன்று இல்லாமல் பார்ட் 2 சீரியல் என்றால் சின்னதான ஒரு மாற்றத்துடன் ஒளிபரப்பு செய்யப்படும். உதாரணத்திற்கு முதல் சீசனில் ஹீரோ பணக்காரராக இருந்தால் 2ஆவது சீசனில் வேலைக்காரனாக இருப்பார். இதுவே முதல் சீசனில் ஹீரோயின் வேலைக்காரியாக இருந்தால் 2ஆவது சீசனில் பணக்காரங்களாக இருப்பார். முதல் சீசன் கிராமத்து கதை என்றால் 2ஆவது சீசன் சிட்டி கதை இல்லையென்றால் சிட்டி கதையிலிருந்து கிராமத்து கதை. இதுதான் காலங்காலமாக சீரியல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
35
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இதே போன்ற டெக்னிக் தான் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் முதல் சீசனில் கார்த்திக்கை பணக்காரராக காட்டினாங்க. இப்போது 2ஆவது சீசனில் அவரை வீட்டு வேலைக்காரனாக டிரைவராக காட்டுறாங்க. இப்போது அவருக்கு திருமணமும் நடந்தது வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறார். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு குங்கும்சிமிழ் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
45
ஊர் தலைவர் தேர்தல்
ஆனால், சிவனாண்டிக்கு குப்பைத் தொட்டி சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக பேக்டரி திறந்த நிலையில் அந்த பேக்டரியை கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள். அதன் பிறகு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார்.
இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மற்றும் சிவனாண்டி இருவரும் கோவிலில் எதேச்சையாக சந்திக்கின்றனர். அப்போது அங்கு வந்த முத்துவேல் இந்த தேர்தலில் நீ ஜெயிக்க முடியாது. நீ தோற்றுவிட்டால் என்னுடைய வீட்டிற்கு உன்னுடைய நான்கு மகள்களுடன் வந்து நீ முறை வாசல் செய்ய வேண்டும் என்று சவால் விடுகிறார்.
55
கார்த்திகை தீபம் 2 - பஞ்சாயத்து தலைவர் தேர்தல்
இதற்கு பதிலடியாக ஒருவேளை நீ தோற்றுவிட்டால் எங்களுடைய வீட்டிற்கு வந்து என்று ஆரம்பிக்க உடனே கார்த்திக் இந்த வேலை செய்ய வேண்டும், அந்த வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி முழுநேர பிரச்சாரத்தில் ஈடுபட சிவனாண்டி நான் ஜெயித்தால் உங்க எல்லாருக்கும் தினமும் குவாட்டர் தருவேன் என்று சொல்லி ஓட்டு சேகரிக்க மயில்வாகனம் இதை வீடியோ எடுக்கிறான்.
பிறகு சாமுண்டீஸ்வரி இந்த வீடியோவை காட்டி இங்க பாருங்க உங்க புருஷனை குடிக்க வைக்கிறான் என்று சொல்லி ஓட்டுக்களை சாதகமாக்குகிறாள். பிறகு ஒரு திட்டம் போட்டு சாமுண்டீஸ்வரி போனில் அந்த ஃபங்ஷனுக்கு நான் வரேன் என்று சொல்ல சந்திரகலா சிவனாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் சாமுண்டீஸ்வரிக்கு முன்பாக அங்கு வருகிறான்.
அது கல்யாண வீடு என்று நினைத்துக் கொண்டு உங்களோடு சந்தோஷத்தில் நான் பங்கெடுத்துக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் என்று டயலாக் பேச கடைசியில் சாவு வீட்ல என்னடா பேசிட்டு இருக்க என்று அவனை அடித்து ஓட விடுகின்றனர். இப்படி மக்களுக்கு எதிராக செயல்படும் சிவாண்டி நடக்க போகும் தேர்தலில் ஜெயிப்பாரா இல்லையா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.