சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாக வரும் சீரியல் 'ரோஜா'. தன்னுடைய தாயை கண்டு பிடித்துவிட்ட கதாநாயகி, போலி மகளாக நடிப்பவரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவார்? என்று பல்வேறு திருப்பு முனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் அனு கதாபாத்திரரத்தில் முதலில் நடித்து வந்தவர் ஷாமிலி, இவர் திடீர் என கர்ப்பமானதால் இந்த தொடரில் இருந்து விலகினார்.
தற்போது இவருக்கு பதிலாக, சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அக்ஷயா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரது நடிப்பில் ஷாமிலி அளவிற்கு வில்லத்தனம் இல்லை என்றாலும், தற்போது வில்லி கதாபாத்திரத்திற்கு செம்மையாக செட் ஆகிவிட்டார்.
இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திடீர் என ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டு கொண்டதால் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். இவர் பூரண நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.