மீண்டும் வருகிறார் ரோலெக்ஸ்! சூர்யாவுடனான கூட்டணி குறித்து லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

Published : May 02, 2025, 11:47 AM ISTUpdated : May 02, 2025, 11:51 AM IST

நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் 'ரோலெக்ஸ்' படம் குறித்த புதிய அப்டேட் கொடுத்து சூர்யா ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.  

PREV
15
மீண்டும் வருகிறார் ரோலெக்ஸ்! சூர்யாவுடனான கூட்டணி குறித்து லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், இயக்குனர் ஷங்கர், அட்லீ, போன்ற இயக்குனர்களுக்கு நிகராக ரூ.50 கோடி பெரும் இயக்குனராக மாறியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் நடித்த, 'லியோ' படம் வெளியாகி ரூ.450 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

இந்த படத்தை முடித்த கையேடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைவதை உறுதி செய்தார். அதன்படி, தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார், தங்கம் கடத்தும் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில், நாகர்ஜுனா, உப்பேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

25
எக்ஸ்பெக்டேஷன் ஜாஸ்தியாக உள்ளது:

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படம் பார்க்க வந்த போது, சூர்யாவை தைத்து தான் இயக்க உள்ள ரோலெக்ஸ் படம் குறித்த புதிய அப்டேட் கொடுத்துள்ளார். 'ரெட்ரோ' பட குழுவினருடன், திரையரங்கிற்கு விசிட் அடித்த லோகேஷ் கனகராஜிடம் செய்தியாளர்கள், ரெட்ரோ படம் குறித்த கருத்தை கேட்டபோது, "இன்னும் 'ரெட்ரோ' படத்தை பார்க்கவில்லை என்றும், இந்த படத்திற்கு கண்டிப்பாக எக்ஸ்பெக்டேஷன் ஜாஸ்தியாக உள்ளது. அதேபோல் படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என கேள்விப்பட்டேன். இது கார்த்திக் சுப்புராஜின் சார் படம் கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும். 

சிவகார்த்திகேயனை நெருங்க முடியாத சூர்யா; ரெட்ரோ முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

35
கார்த்திக் சுப்புராஜ்:

ரெட்ரோ படத்தை பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருக்கிறேன். அவரை பார்க்கும் போதெல்லாம் படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என கேட்டுக் கொண்டே இருப்பேன். அதேபோல் இந்த படத்தில் என்னுடைய நண்பர்கள் பலர் வேலை செய்திருக்கிறார்கள். பொதுவாகவே கார்த்திக் சுப்புராஜின் படங்களில் வேலை செய்பவர்கள் பாதிப்பேர் என்னுடைய படங்களிலும் பணிபுரிவார்கள். அதனால் அவ்வப்போது படம் குறித்த அப்டேட் தெரிந்து கொள்வேன். நான் வெயிட் பண்ணிய படங்களில் இதுவும் ஒன்று. இன்று இரவு கண்டிப்பாக படத்தை பார்த்து விடுவேன் என கூறினார்.
 

 

45
ரோலெக்ஸ் படத்தில் இணைவோம்:

இதைத் தொடர்ந்து நீங்களும் சூர்யாவும் இணைந்து படம் பண்ணுவீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு? "கண்டிப்பாக 'ரோலெக்ஸ்' இருக்கிறது. எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கேட்டதற்கு, கூலி படத்தின் அப்டேட் உங்களுக்கெல்லாம் தெரியுமே. ஆகஸ்ட் 14 ரிலீஸ் ஆக இருக்கு.  'ரோலக்ஸ்' படம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. சாரும் கமிட்மெண்டில் இருக்கிறார். நானும் கமிட்மெண்டில்  இருக்கிறேன். அவை முடிந்த பின்னரே எங்களின் படம் துவங்கும். 

கங்குவா தோல்விக்கு பின் கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ விமர்சனம் இதோ

 

55
ஸ்ரீயின் தற்போதைய நிலை :

சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்ததன் காரணத்தைக் கேட்டபோது, "நான் சமூக வலைதளத்தில் இருந்து நீங்க ஒரே... காரணமே ஏதாவது ஒரு விஷயம் திரும்பத் திரும்ப சமூக வலைத்தளத்தில் வெளியாகி  கொண்டே இருக்கிறது. அது என்னுடைய வேலையை அதிகம் பாதிக்கிறது. இடையில் ஸ்ரீ பற்றிய செய்திகளும் வெளியாகின. அவையெல்லாம் என்னை அதிகம் பாதித்தது. அதனால் ஒரு மூன்று மாதம் படம் முடியும் வரை ப்ரேக் எடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories