தென்றல் சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், பின்னி பெடல் எடுக்கும் அளவிற்கு நடிப்பு திறமையை வளர்த்து கொண்டுள்ளவர் ஷாமிலி.
தன்னுடைய 20 வயதில் சீரியலில் நடிக்க துவங்கிய ஷாமிலி கடந்த 9 வருடங்களாக பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சென்னையை சேர்ந்த ஷாமிலி... இளநிலை கல்லூரி படிப்பை முடித்ததும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலை தேர்வு செய்தார்.
தென்றல் சீரியலை தொடர்ந்து, உதிரி பூக்கள், பாசமலர், ரோஜா, என வரிசையாக பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக தற்போது சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்த ரோஜா சீரியலில் இவர் வில்லியாக நடித்து வரும் கதாபாத்திரம், நிஜ வில்லிகளையே மிஞ்சும் விதத்தில் உள்ளது என பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இவர் தான் கர்ப்பமாக உள்ள தகவலை அன்னையர் தினம் அன்று கணவருக்கு கூறி, சுர்பிரைஸ் செய்த வீடியோவை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாலும், கொரோனா இரண்டாவது அலை அதிகமாகி இருப்பதாலும் மருத்துவர்கள் அவர் வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என கூறி உள்ளதால், ஷாமிலி ரோஜா சீரியலில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது இவரது வில்லித்தனமான நடிப்பை ரசித்து வந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.