ரெட் அண்ட் பாலோ படத்தின் இயக்குனருடைய மனைவி, செயின் எல்லாத்தையும் வைத்து, வீரமணி என்பவரும் உடன் சேர்ந்து, நாங்க ஒரு டீம் ஆக இந்த படத்தை தயாரித்தோம். நான் கொடுத்த வழக்கின் அடிப்படையில், நான்கு மாதமாக விசாரணை நடைபெற்று, உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கு ஏற்ப தற்போது அவரை கைது செய்திருக்கிறார்கள். எங்களிடம் காசு கேட்டு மிரட்டியது மட்டுமின்றி, காசையும் பிடுங்கிவிட்டு, எங்களை அடிக்கும் அளவுக்கு சவுக்கு சங்கருக்கு தைரியம் இருக்கிறது என்றால், அவருக்கு ஏதோ கட்சி பின்புலம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த கட்சியே அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் என்னோட கருத்து.
இதுமாதிரி மற்றவர்கள் சினிமாவில் பாதிக்கப்படக்கூடாது என்கிற ஒரே ஒரு காரணத்தால் தான் நான் இப்படி செய்தேன். இவ்வளவு நாள் பொறுத்திருந்தற்கான பலன் தான் சவுக்கு சங்கர் அரஸ்ட். நான் போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தில் படம் பண்ணதாக அவர் சொன்னது தவறு என்பதால் அதற்கான ஆதாரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காட்டினேன். அவரிடம் ஏன் இப்படி தவறாக பேசுறீங்க என கேட்டதற்கு, இப்படியெல்லாம் பேசுனீங்கனா, நான் இதைவிட அதிகமாக வீடியோ விடுவேன். நான் கேட்டதை கொண்டுவந்தீங்களா என்று கேட்டார்.
அவர் எங்களிடம் 10 லட்சம் கேட்டார். நான் ஒரு லட்சம் தான் எடுத்து சென்றிருந்தேன். அப்போது அங்கு பிரச்சனை ஆகி, அவரது ஆபிஸில் வைத்து என்னையும் டைரக்டரையும் அடித்தார் சவுக்கு சங்கர். என்னை கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி என் உயிர்நாடியில் பிடித்தார். கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் என்னுடைய உயிரே போயிருக்கும். அப்புறம் அங்கிருந்து உயிர்பயத்தில் வெளியே ஓடிவந்துவிட்டோம். இப்போ நான் மன உளைச்சலில் இருக்க காரணம், என் படத்தின் பிசினஸ் இதனால் பாதித்துள்ளது. அந்த வியாபாரம் நின்று போனால் அதற்கான நஷ்ட ஈடு சவுக்கு சங்கர் தான் தர வேண்டும்” என மகேஷ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.