Priyanka : பிக்பாஸில் கணவர் குறித்து வாயே திறக்காத பிரியங்கா.. இவ்ளோ பிரச்சனை இருக்கா? - உண்மை பின்னணி இதுதான்

First Published | Jan 23, 2022, 1:07 PM IST

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தினர் பற்றி பேசுவர். ஆனால் பிரியங்கா தனது கணவர் குறித்து அந்நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் கூட பேசவில்லை. 

வெள்ளித்திரையில் வலம் வரும் நட்சத்திரங்களை விட சின்னத்திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றே கூறலாம். அந்த வகையில், விஜய் டிவி தொகுப்பாளினிகளில் டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய காமெடியான பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா.

இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதேபோல் ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி போன்ற நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

Tap to resize

இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரியங்கா, நூலிழையில் டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை தவறவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இருப்பினும் அந்நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கிய போட்டியாளர் இவர்தான். இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா, கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரவீன்  உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சமயத்தில், அதே ஷோவை தொகுத்து வழங்கிய பிரியங்கா, அவர் மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தினர் பற்றி பேசுவர். ஆனால் பிரியங்கா தனது கணவர் குறித்து அந்நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் கூட பேசவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. 

அதன்படி பிரியங்காவின் கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கன்சோல் மேனேஜராக பணியாற்றினராம். நிகழ்ச்சியின் விதிப்படி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் உறவினர்களோ, நண்பர்களோ அதில் பணியாற்றி வந்தால் அவர்களைப் பற்றி பேசக்கூடாதாம். அதனால் தான் பிரியங்கா, 106 நாட்களும் தனது கணவர் குறித்து வாயே திறக்காமல் இருந்து வந்துள்ளார்.

Latest Videos

click me!