எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி, திரையுலகில் சாதிக்க வேண்டும் என ஒருவர் இறங்கினால், ஆரம்ப காலங்களில் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை கடக்க வேண்டி இருக்கும், அப்படி பல்வேறு பிரச்சனைகள், நிராகரிப்புகளை கடந்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்திருப்பவர் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்.
இவர் ஒரு கிரிக்கெட் வீரராக ஆக வேண்டியவர், ஆனால் இன்று ஒரு பிரபல நடிகராக காலம் இவரை மாற்றிவிட்டது.
ராஞ்சி கோப்பை போன்ற சில கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். அவ்வளவு ஏன், கிரிக்கெட் வீரர், ரவிச்சந்திரன் அஷ்வின் அணிக்கு இவர் தான் கேப்டனாக கூட இருந்தாராம்.
இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷாலை, அஷ்வின் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். அதில் இருவரும் பல சுவாரஸ்யமான தகவல்கள், மற்றும் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அஷ்வின் இதுகுறித்து, விஷ்ணுவிஷாலிடம் கேட்கையில்... நான் கிரிக்கெட்டை விட்டு விட்டேன் என்பதை விட கிரிக்கெட் தான் என்னை விட்டு விட்டது என கூறியுள்ளார்.
சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தை தனக்குள் கொண்டு வந்தவர் தன்னுடைய பெரியப்பா என்றும், அதனால் நானும், கிட்ட தட்ட 6 வருடங்கள் பல படங்களில் நடிக்க முயற்சி செய்தேன் ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஒருநிலையில் இது வெறுத்து போய், ஐடி கம்பெனி ஒன்றில் பணியில் சேர்ந்தேன், அங்கு சென்று மூன்று வாரங்களுக்கு பின், வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக விஷ்ணு விஷால் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒருவேளை, கிரிக்கெட் விளையாடும் போது வந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு, போராடி கிரிக்கெட்டை இவர் விடாமல் இருந்திருந்தால், இன்று முன்னணி கிரிக்கெட் வீரராக விஷ்ணு விஷால் இருந்திருப்பார் என்பது உறுதி.
விஷ்ணு விஷால், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடுவதால், இவர் சூப்பராக கிரிக்கெட் விளையாடுவார் என்பது தெரியும், ஆனால் உண்மையில் அவர் ஒரு கிரிக்கெட்டர் என்கிற பலருக்கும் தெரியாத தகவல் இப்போது வெளியாகியுள்ளது.