ஆதித்யா சர்போதர் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள மேடாக் ஃபிலிம்ஸின் சூப்பர்நேச்சுரல் யூனிவர்ஸின் புதிய படமான 'தம்மா' முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
மேடாக் ஃபிலிம்ஸின் சூப்பர்நேச்சுரல் யூனிவர்ஸின் புதிய படமான 'தம்மா' சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை ஆதித்யா சர்போதர் இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நவாசுதீன் சித்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரமும் வெளியாகியுள்ளது.
24
சூப்பர்நேச்சுரல் யூனிவர்ஸ்
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி அன்று வெளியான 'ஸ்திரீ 2' பாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடிக்கு மேல் வசூலித்தது. ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம், 2018-ல் அமர் கௌஷிக் இயக்கிய படத்தின் இரண்டாம் பாகமாகும். மேடாக் ஃபிலிம்ஸின் சூப்பர்நேச்சுரல் யூனிவர்ஸ் 'ஸ்திரீ'யில் இருந்து தொடங்கியது.
34
1000 கோடி வசூல்
2022-ல் வருண் தவான் மற்றும் கிருத்தி சனோன் நடித்த 'பேடியா' படத்திற்குப் பிறகு, இந்த வரிசையில் அடுத்ததாக 'முஞ்ச்யா' படம் வெளியானது. இதுவும் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு ஆகஸ்ட் 15 அன்று 'ஸ்திரீ 2' வெளியானது. இந்த வரிசையில் தான் 'தம்மா' வந்துள்ளது. இதுவரை இந்த யூனிவர்ஸ் படங்களின் தயாரிப்புச் செலவு சுமார் 300 கோடி. ஆனால் இதுவரை இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.
அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள தம்மா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே வசூல் வேட்டை ஆடி இருக்கிறது. அதன்படி ராஷ்மிகாவின் தம்மா திரைப்படம் நேற்று இந்தியாவில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்தது. உலகளவில் இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது டியூட் படத்தின் முதல் நாள் வசூலைவிட அதிகமாகும். பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் முதல் நாளில் ரூ.22 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. அதேபோல் நேற்றைய தினம் டியூட் படத்திற்கு வெறும் 10.5 கோடி மட்டுமே வசூல் கிடைத்துள்ளது. அதைவிட 3 மடங்கு அதிக வசூலை தம்மா பெற்றுள்ளது.