தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?

Published : Feb 23, 2026, 03:55 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா, விரைவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், ராஷ்மிகாவின் முதல் காதல் பற்றி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

PREV
14
Rashmika Mandanna First Love Story

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது. விஜய் தேவரகொண்டாவை தான் கரம்பிடிக்க உள்ளார் ராஷ்மிகா. இவர்கள் திருமணம் பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் நடைபெறும். ராஷ்மிகாவுக்கு இதற்கு முன்பே ஒருமுறை நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் நின்றுபோனது உங்களுக்குத் தெரியுமா? இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அப்போதும் ஒரு நடிகரை தான் ராஷ்மிகா காதலித்து கரம்பிடிக்க இருந்தார். அந்த திருமணம் ஏன் நின்று போனது என்பதை பார்க்கலாம்.

24
ராஷ்மிகாவின் முதல் காதல்

தனது முதல் படமான 'கிரிக் பார்ட்டி' (கன்னடம்) படப்பிடிப்பின் போது ராஷ்மிகாவுக்கு நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மீது காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது ராஷ்மிகாவுக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 30, 2016ல் 'கிரிக் பார்ட்டி' வெளியானது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 3, 2017 அன்று, தன்னை விட 13 வயது மூத்தவரான ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

34
நின்று போன திருமணம்

ராஷ்மிகாவும் ரக்‌ஷித்தும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பே இந்த உறவு முறிந்தது. நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ளும் ராஷ்மிகா மற்றும் ரக்‌ஷித்தின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. செப்டம்பர் 2018ல், ராஷ்மிகாவும் ரக்‌ஷித்தும் பிரிந்தனர். இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளே காரணம் எனக் கூறப்பட்டது. இருவரும் தங்கள் கெரியருக்கு முன்னுரிமை அளித்து பிரிந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
ராஷ்மிகா எடுத்த முக்கிய முடிவு

நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு, ராஷ்மிகா தனது கெரியரில் கவனம் செலுத்தினார். 'கீதா கோவிந்தம்', 'புஷ்பா', 'சீதா ராமம்', 'அனிமல்' போன்ற படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டார் ஆனார். ரக்‌ஷித் ஷெட்டியும் கன்னட சூப்பர் ஸ்டார் ஆனார். அன்று கெரியருக்காக தன்னுடைய காதலையே தூக்கியெறிந்த ராஷ்மிகாவின் அந்த முடிவு அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி இருக்கிறது. ஒருவேளை அன்று ராஷ்மிகா, ரக்‌ஷித் ஷெட்டியை திருமணம் செய்திருந்தால், அவருடைய சினிமா பயணம் கேள்விக்குறி ஆகி இருக்கும். அதனால் இது நல்ல முடிவு என்றே அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories