Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
ராஷ்மிகா மந்தனா தனது 29வது பிறந்தநாளை ஓமன் நாட்டில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று எடுத்த சில புகைப்படங்களை ராஷ்மிகா பகிர்ந்திருந்தார். அப்போது ராஷ்மிகா யாருடன் கொண்டாடினார் என்கிற கேள்வி எழுந்தது. தற்போது சில புகைப்படங்கள் மூலம் அதற்கு பதில் கிடைத்துள்ளது.
27
Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
ஓமனில் பிறந்தநாள் கொண்டாட்டம்
ராஷ்மிகா மந்தனா ஓமன் நாட்டில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ரிசார்ட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஏப்ரல் 5ந் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாடிய அவர், அன்று ஓமன் கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து இன்றைய டைரியை காட்டுவதாக கூறியிருந்தார்.
37
Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
ராஷ்மிகா மந்தனா கடற்கரை மணலில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ஒரு நாட்களுக்கு பின்னர், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரும் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் புகைப்படங்கள் உள்பட சில போட்டோக்களை பகிர்ந்திருந்தார்.
47
Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
கடற்கரையில் காதல் ஜோடி
இந்த புகைப்படங்கள் மூலம் ராஷ்மிகா மந்தனா தனது பிறந்தநாளை விஜய் தேவரகொண்டாவுடன் கொண்டாடியது உறுதியாகி உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருவரின் புகைப்படங்களில் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் வெள்ளை மணல் பரப்புடன் கூடிய கடற்கரை புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இருவரின் பின்னால் இருக்கும் லொகேஷன் ஒரே மாதிரி உள்ளது.
Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
கண்டுபிடித்த நெட்டிசன்கள்
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா புகைப்படங்களில் பின்னணியில் சிவப்பு கொடி ஒன்றும் பறக்கிறது. இருவரின் புகைப்படங்களின் பின்னணியும் ஒரே மாதிரி உள்ளது. இதனால் தான் இது ராஷ்மிகா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் தானே என தேவரகொண்டா பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
67
Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
மெளனம் காக்கும் ராஷ்மிகா
இருவரும் ஓமன் நாட்டில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஜோடியாக தங்கி உள்ளனர். மேலும் தொடர் படப்பிடிப்புகளால் பிசியாக இருந்த இருவரும் தற்போது பிரேக் எடுத்து அங்கு ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. புகைப்படங்களில் ஒற்றுமை உள்ளது உண்மைதான். ஆனால் இதுகுறித்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
77
Rashmika Mandanna Birthday Celebration With Vijay Deverakonda
விரைவில் குட் நியூஸ்?
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிப்பதாக பல வருடங்களாக செய்திகள் பரவினாலும் இந்த ஜோடி இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் பலமுறை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒன்றாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். தற்போது ராஷ்மிகா பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் இருவரும் ஒன்றாக இருந்தது உறுதியானதால், விரைவில் குட் நியூஸ் வர வாய்ப்புள்ளது.