வீடு தேடி வந்த 100 கோடி டீல்... ரிஜெக்ட் பண்ணிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா - பின்னணி என்ன?

Published : Feb 14, 2026, 12:43 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர்கள் இருவரும் ஜோடியாக 100 கோடி ரூபாய் ஆஃபரை ரிஜெக்ட் பண்ணி உள்ளனர்.

PREV
15
Rashmika Wedding OTT Streaming Rights

பிரபலங்களின் திருமண வீடியோக்களை ஓடிடி தளங்கள் வாங்கி ஸ்ட்ரீம் செய்வது புதிய டிரெண்ட் ஆக மாறி இருக்கிறது. இதற்காக கோடிகளை கொட்டுகின்றனர். ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா, திருமண வீடியோவிற்கு ஒரு ஓடிடி நிறுவனம் 100 கோடி ஆஃபர் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ல் உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. திருமணத்தை வீடியோ ஸ்ட்ரீம் செய்யும் உரிமைகளுக்காக ஓடிடி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. ஒரு நிறுவனம் 100 கோடி ஆஃபர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

25
நெட்பிளிக்ஸில் வந்த நயன்தாரா திருமண வீடியோ

இதற்கு முன்னதாக நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் 25 கோடிக்கு வாங்கியது. 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற பெயரில் இது ஆவணப்படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். இந்த வீடியோ நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ரிலீஸ் ஆனது. அதற்காக தடையில்லா சான்று பெறுவதில், தனுஷ் உடன் ஏற்பட்ட பிரச்சனையால், இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த நயன்தாரா கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் இந்த ஆவணப்படத்தை ரிலீஸ் செய்தார்.

35
ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்ட ஹன்சிகா திருமண வீடியோ

நயன்தாரா மட்டுமின்றி நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ 'ஹன்சிகாஸ் லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. அவர் சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தியும், தற்போது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரியும் முடிவுக்கு வந்திருக்கிறார் ஹன்சிகா.

45
நோ சொன்ன நாக சைதன்யா

திருமணா வீடியோக்களை ஓடிடிக்கு தாரைவார்க்கும் பிரபலங்களுக்கு மத்தியில், நாக சைதன்யா-சோபிதா போன்ற ஜோடி, திருமண வீடியோவிற்கு நெட்ஃபிளிக்ஸ் 50 கோடி ஆஃபர் செய்தும் அதை ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில், ஓடிடி நிறுவனங்கள் திருமண வீடியோ மட்டுமின்றி, பழைய காதல், பிரேக்கப் போன்ற தனிப்பட்ட விஷயங்களையும் தோண்டி எடுப்பார்கள். இதற்காகவே இவ்வளவு பணம் தருகிறார்கள். அதனால் அவற்றிற்கு நோ சொல்லிவிட்டார் நாக சைதன்யா.

55
100 கோடி ஆஃபரை நிராகரித்த ராஷ்மிகா

இந்த வரிசையில் தற்போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடியும் இணைந்துள்ளது. இவர்களும் சுமார் 100 கோடி ரூபாய் ஆஃபரை நிராகரித்ததாக தகவல் கசிந்துள்ளது. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா முன் வைக்க விரும்பாததால், குடும்பத்தினர் மத்தியில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்ய அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்திற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதைப்பற்றி இருவரும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories