தெலுங்கு நடிகர் ராணா சமூக வலைதளங்களில் திடீர், திடீர் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார். இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்த தகவலை ராணாவின் அப்பா மறுத்துள்ள நிலையில், ராணா தனது சோசியல் மீடியா பக்கங்களில் மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.