தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் ரம்யா கிருஷ்ணன். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்களுடனும், தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்தியில் அமிதாப், ஷாருக்கான் போன்ற நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
40 ஆண்டு கால திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். இன்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனது இமேஜை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக உச்ச நட்சத்திரமாக இருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது குணச்சித்திர நடிகையாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.