தியேட்டரில் அதிக மக்கள் பார்த்த தமிழ் படம் பற்றி தெரியுமா? 29 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை

Published : Aug 06, 2026, 02:06 PM IST

Most Watched Tamil Movie : தமிழ் சினிமா வரலாற்றில் தியேட்டரில் அதிக மக்கள் பார்த்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அது அஜித், விஜய், ரஜினி, கமல் படங்கள் இல்லை.

PREV
15
Most Watched Tamil Movie

தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் குடும்பத் திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது சூர்யவம்சம். 1997-ல் வெளியான இந்தப் படம், சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததுடன், இயக்குநர் விக்ரமனின் கெரியரிலும் திருப்புமுனையாக அமைந்தது. எளிமையான கதைக்களத்தை காதல், குடும்ப பாசம், நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்த திரைக்கதையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காவியமாக மாற்றினார் விக்ரமன். இந்தப் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார் சரத்குமார்.

'டியூட்' படத்தில் அமைச்சராக அதகளம் பண்ணிய சரத்குமார் - ஷோ ஸ்டீலர் என பாராட்டும் ரசிகர்கள்..!

25
டிஆர்பியிலும் சாதனை

சூர்யவம்சம் திரைப்படம் தமிழில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கதை பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பப்பட்டாலும் பார்வையாளர்கள் மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக சன் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங் அள்ளிய படங்களில் சூர்யவம்சம் படமும் ஒன்றாக இருக்கிறது. அந்த அளவுக்கு இன்றைய தலைமுறையினரையும் அப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

35
கொண்டாடப்படும் பாடல்

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.ஏ. ராஜ்குமார். 90-களில் அவரது மெலோடி பாடல்கள் ரசிகர்களின் இதயத்தை வென்ற நிலையில், சூர்யவம்சம் படத்தின் பாடல்களும் அக்காலத்தில் ஆடியோ கேசெட் விற்பனையில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றன. அதில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடலாக 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' அமைந்தது. அப்பாடல் இன்றும் இன்ஸ்டாவில் டிரெண்டிங் ஆக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் சீமான் தான். அவர் ஒரு விழா மேடையில் அப்பாடலை பாடியதை இன்றைய ஜென் ஸி கிட்ஸ் ரிப்பீட் மோடில் கேட்கிறார்கள்.

45
முறியடிக்க முடியாத சாதனை

இப்படி காலம் கடந்து கொண்டாடப்படும் காவியமாக மாறி இருக்கும் சூர்யவம்சம் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது படைத்த சாதனையை இன்று வரை எந்த ஒரு படத்தாலும் முறியடிக்கப்படவில்லை. அது என்னவென்றால், தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகம் பேர் தியேட்டருக்கு வந்து பார்த்த படம் என்கிற சாதனையை சூர்யவம்சம் படைத்திருந்தது. அந்த சாதனையை இன்று வரை எந்த படமும் முறியடிக்கவில்லை என அண்மையில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டபோது நடிகர் சரத்குமாரே ஓப்பனாக சொல்லி இருந்தார்.

55
சூர்யவம்சம் 2 வருமா?

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி மாஸ் நடிகர்கள் பல வருடங்களாக சினிமாவில் கோலோச்சி வருவதோடு, அதிக ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருக்கின்றனர். அவர்களால் படைக்க முடியாத இந்த சாதனையை சரத்குமார் நடித்த சூர்யவம்சம் படம் படைத்திருப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து இயக்குநர் விக்ரமனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories