தலைவர் 173 பட்ஜெட் : கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் கமல்... சுந்தர் சி-யின் சம்பளமே இத்தனை கோடியா?

Published : Nov 08, 2025, 02:47 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படத்துக்காக பட்ஜெட்டை வாரி வழங்கி இருக்கிறாராம் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி சுந்தர் சி-யின் சம்பள விவரமும் வெளியாகி இருக்கிறது.

PREV
14
Thalaivar 173 Movie Budget

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் 2 ஷூட்டிங்கும் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. அதற்கு கடந்த வாரம் விடை கிடைத்தது. அதன்படி சுந்தர் சி தான் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 17-ஐ இயக்க இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னர் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தை இயக்கி இருந்தார் சுந்தர் சி.

24
தலைவர் 173

தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ள நிலையில், அப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை கமல்ஹாசன் ஏற்றிருக்கிறார். சமீப காலமாக பட தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்து வரும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது என்கிற செய்தி வெளியானதும், அப்போ படம் கன்பார்ம் ஹிட்டு தான் என பேச்சுக்கள் எழத் தொடங்கி உள்ளன. சுந்தர் சி-யும் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருவதால், தலைவர் 173 திரைப்படம் ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

34
பட்ஜெட் எவ்வளவு?

கமல்ஹாசன் தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அவர் தயாரித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக தலைவர் 173 இருக்குமாம். இப்படத்திற்காக ரஜினிகாந்தின் சம்பளத்துடன் சேர்த்து மொத்தம் 275 கோடி பட்ஜெட் ஒதுக்கி உள்ளாராம் கமல்ஹாசன். சுந்தர் சி-யின் கெரியரில் அவர் இயக்க உள்ள மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுவாகும். தற்போது அவர் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்.

44
சம்பளம்

தலைவர் 173 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 180 முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சுந்தர் சி-க்கும் ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். அவர் தற்போது இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது ரஜினியின் தலைவர் 173 படத்திற்காக அதைவிட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். தலைவர் 173 திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories