சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி, உலகளவில் ரூ.350 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் எப்போது OTTயில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'கூலி' படத்தின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், திரையரங்கு வெளியீடு முடிந்த பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
24
கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ்
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட வெர்ஷன் மட்டுமே அப்போது வெளியாகும். இப்படத்தின் இந்தி வெர்ஷன் அக்டோபர் மாதம் தான் ஓடிடிக்கு வரும். இருப்பினும், தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதால் இப்படத்தை குழந்தைகளுடன் சென்று தியேட்டரில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஓடிடியில் வெளியான பின்னர் ஏராளமானோர் இப்படத்தை பார்க்க வாய்ப்பு உள்ளது. கூலி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.120 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.
34
'கூலி' படத்தின் கதை என்ன?
'கூலி' படத்தின் கதைப்படி, தனது நண்பரின் மர்ம மரணத்தை பற்றிய விசாரணையில், அவர் பல விசித்திரமான விஷயங்களைக் கண்டுபிடித்து, இறந்த நண்பரின் மகள் ப்ரீத்தியுடன் சேர்ந்து விசாரிக்கிறார். கடத்தல்காரர் சைமனின் கும்பலுடன் அவர் மோதுகிறார். இதில் அவர் தன் நண்பனை கொன்றவர்களை வேட்டையாடினாரா? என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் ரஜினிகாந்துடன், சத்யராஜ், நாகர்ஜுனா, சோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம், காளி வெங்கட், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
'கூலி' படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே ரூ.65 கோடி வசூலுடன் தொடங்கியது. இரண்டாவது நாளில் ரூ. 54.75 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.39.5 கோடியும், நான்காவது நாளில் ரூ.35 கோடியும் வசூலித்தது. இதன்மூலம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இதுவரை 194.25 கோடி வசூலித்துள்ளது இப்படம். இந்த வசூல் இன்று 200 கோடியை கடக்கக்கூடும். அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் மாஸ் காட்டி வரும் இப்படம் அங்கும் கிட்டத்தட்ட 200 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் கூலி படைத்துள்ளது.