Rajinikanth Rejected Baashha Movie Song: 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடல் ஒன்றை ரஜினிகாந்த் நிராகரித்த நிலையில், இயக்குனர் பிடிவாதத்தால் இந்தப்பாடல் படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த சம்பவம் பற்றி தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் வசூலில் அப்போதே வரலாற்று சாதனை படத்தை திரைப்படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ரஜினிகாந்த் மாஸ் ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து மிரளவைத்திருந்தார். இவருடன் நக்மா, விஜயகுமார், ஜனகராஜ், சரண் ராஜ், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இந்த படத்திற்கு இசையமைத்த அனைத்து பாடல்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
27
மாஸ்டர் பீஸ்
இந்த திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சம், என்றால் சாதாரண மனிதனாகத் தோன்றும் கதாநாயகன், பின்னர் ஒரு சக்திவாய்ந்த டானாக மாறும் கதை அமைப்பாகும். முதல் பாதியில் ஆட்டோ ஓட்டுநராக அமைதியாக வாழும் மனிதன், இரண்டாம் பாதியில் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் விதம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக ரஜினிகாந்தின் ஸ்டைல், டயலாக் டெலிவரி, மற்றும் கம்பீரமான பாவனைகள் இந்த படத்தை மாஸ்டர் பீஸாக உயர்த்தியது.
37
நான் ஒருத்தடவை சொன்னா
“நான் ஒருத்தடவை சொன்னா... 100 தடவை சொன்ன மாதிரி” போன்ற வசனங்கள் இன்று வரை ரசிகர்களிடையே பேசப்படும் அளவுக்கு பிரபலமானவை. பாட்ஷா படத்தின் மற்றொரு பெரிய பலம் இந்த படத்தில் இடம்பெற்ற தேவா-வின் இசை தான். பின்னணி இசை மற்றும் பாடல்களாக “ஸ்டைலு ஸ்டைலு தான்”, “தங்கமகன்”, “ஆட்டோக்காரன்” போன்ற அனைத்துமே பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
47
நீ நடந்தால் நடை அழகு
ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பிரபலமான பாடலுக்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆதாவது “நீ நடந்தால் நடை அழகு” என்ற பாடல் உருவாக்கப்பட்டு, ரெக்கார்டிங் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், அதை படத்தில் சேர்ப்பது குறித்து குழப்பம் ஏற்பட்டதாம்.
57
பாடலைப் படத்தில் சேர்க்க வேண்டாம்
ஒரு நாள் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, இடைவேளையில் இயக்குநரும், ரஜினிகாந்தும் இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டுடியோவுக்குச் சென்று ரெகார்ட் செய்த பாடலைக் கேட்டுள்ளனர். பாடலின் மெட்டும், ரிதமும் அனைவரையும் கவர்ந்தது. அங்கு இருந்தவர்கள் அனைவரும் அந்தப் பாடலை பாராட்டியதாகவும்.... ஆனால், எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் அந்தப் பாடலைப் படத்தில் சேர்க்க வேண்டாம் என்ற கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
67
தேவா அப்செட்
ஏற்கனவே இரண்டு டூயட் பாடல்கள் உள்ள நிலையில், மேலும் ஒரு பாடல் சேர்த்தால் கதையின் ஓட்டத்தை சீர்குலையும் என்று கூறினாராம். எனவே இந்த பாடலை ஆடியோ வடிவில் மட்டும் வெளியிடலாம் என்ற எண்ணத்தை கூற... தேவா ரஜினிகாந்தின் இந்த முடிவால் கடும் அப்செட் ஆகியுள்ளார்.
77
கிரீன் சிங்னல்
அதே நேரம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அந்தப் பாடல் படத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அதை படத்தில் இடம்பெற வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம். இதை எப்படி ரஜினியிடம் கூறுவது என தெரியாமல் அங்கும்... இங்கும் நடந்து கொண்டிருக்க, இவரை கவனித்த ரஜினி துணை இயக்குனராக இருந்த, சுரேஷ் கிருஷ்ணா மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் இந்த பாடம் இடம்பெற வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை சொல்ல... அவரின் முடிவுக்கு கிரீன் சிங்னல் கொடுக்கும் விதமாக ஓகே சொல்லி அந்த பாடலில் நடித்து கொடுத்தாராம். இந்த படம் திரைப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.