“பீஸ்ட் டச்... பாட்ஷா பில்டப்” என்ன நெல்சா இதெல்லாம்! ரஜினியின் ஜெயிலர் பட டிரைலரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா

First Published | Aug 3, 2023, 9:01 AM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நெல்சன் உடன் ரஜினிகாந்த் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினி உடன் தமன்னா, ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, விநாயகன், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அது பல்வேறு படங்களோடு ஒப்பிடப்பட்டும் வருகின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதென்ன ஷோகேஸ்?

சமீப காலமாக படங்களின் டிரைலர்கள் வித்தியாசமான பெயர்களுடன் வெளியாகிறது. உதாரணத்துக்கு ஷாருக்கானின் ஜவான் பட டிரைலரை ப்ரிவியூ என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. தற்போது நெல்சனும் அதே டிரெண்டை பின்பற்றி ரஜினியின் ஜெயிலர் பட டிரைலரை ஷோகேஸ் என்கிற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்.

பீஸ்ட் டச்

2 நிமிடம் 16 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலரின் ஆரம்பத்திலேயே சிபிஐ-யை பங்கம் பண்ணி இருக்கிறார்கள். சிபிஐ என அதிகாரி ஒருவர் சொன்னதும் டொனேஷன் எதாச்சும் வேணுமா என கேட்டு நோஸ் கட் கொடுக்கிறார் சுனில். அப்படியே அடுத்த காட்சியில் பீஸ்ட் மோடுக்கு அழைத்து செல்கிறார் நெல்சன். அதில் ரஜினிக்கு ஒரு நோய் இருப்பதாகவும், அந்த நோய் வந்தவர்கள் பூனை போல் இருப்பார்கள் திடீரென புலியாக மாறுவார்கள் என விடிவி கணேஷ் கூறுகிறார். இதைப்பார்க்கும் போது பீஸ்ட்டிலும் விஜய்க்கு இதேபோல் ஒரு நோய் இருப்பதாக சொல்லும் காட்சி தான் ஞாபகத்துக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... அப்பா - அம்மாவுக்கு 60-ஆம் கல்யாணம் செய்து அழகு பார்த்த விஜய் டிவி KPY பாலா! வைரலாகும் வீடியோ..!

Tap to resize

பாட்ஷா பில்டப்

நெக்ஸ்ட் விக்ரம் படத்தையும் சற்று நினைவூட்டும் விதமாக ரஜினி தனது போலீஸ் மகன் மற்றும் பேரனுக்கு ஷூ பாலிஷ் போட்டு விடும் காட்சிகள் உள்ளன. விக்ரம் படத்தில் கமலுக்கும் ஒரு போலீஸ் மகன் இருப்பார். பின்னர் பாட்ஷா ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் விதமாக ரஜினியை பற்றி ஜாக்கி ஷெராப் வில்லனிடம் போனில் கூறியதும் ‘நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்’ என பஞ்ச் டயலாக் பேசி அரிவாளை எடுத்து ஆக்‌ஷன் மோடுக்கு மாறுகிறார் ரஜினி.

அதுமட்டுமின்றி பாட்ஷா படத்தில் ரஜினி பாட்ஷாவாக இருக்கும் போது அவர் தன்னுடைய படையுடன் கெத்தாக நடந்து வரும் காட்சி இடம்பெற்று இருக்கும். அதேபோன்று ஜெயிலர் படத்திலும் ஒரு பிரேமில் ரஜினியை பாட்ஷா மோடுக்கு அழைத்து சென்றிருக்கிறார் நெல்சன். இப்படி பல்வேறு படங்களின் காட்சிகளுடன் கூடிய ஜெயிலர் டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் என்ன நெல்சா இதெல்லாம், எல்லா படத்தையும் கலந்து எடுத்து வச்சிருக்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமன்னா எங்கடா...

இந்த டிரைலரில் தமன்னாவை ஒரு சீனில் கூட காட்டவில்லை. இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அப்போ தமன்னாவை காவாலா பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி இருக்கிறாரா நெல்சன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு மோகன்லால், ஷிவ ராஜ்குமார் ஆகியோரின் கேரக்டரையும் கண்ணில் காட்டாததால், அவர்கள் கேரக்டர் படத்தில் சஸ்பென்ஸாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. ஆக மொத்தம் பூனை புலியாக மாறும் கதையை தான் ஜெயிலர் சொல்ல வருகிறது என்பது இந்த டிரெய்லர் மூலம் உறுதியாக தெரிகிறது. அந்த புலி பாயுமா இல்லை பதுங்குமா என்பது ஆகஸ்ட் 10-ந் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்... இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதையை சொல்ல வரும் “ஹர்காரா” ! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest Videos

click me!