Annaatthe Box Office: விமர்சனங்களை முறியடித்து கெத்து காட்டும் 'அண்ணாத்த'..! இதுவரை இத்தனை கோடி வசூலா?

First Published | Nov 20, 2021, 2:12 PM IST

தீபாவளியை முன்னிட்டு வெளியான 'அண்ணாத்த' (Annaatthe) திரைப்படம், மூன்றாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ள நிலையில், உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் (Worldwide box office collection) செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு உலக அளவில், ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி இடம் இருந்து வருகிறது. அந்த வகையில்,  கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் 'பேட்ட'. கடந்த ஆண்டு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'தர்பார்' படத்தை தொடர்ந்து வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'.

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு வெளியான இந்த படத்தில், அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மாஸ் இல்லாமல், கண்ணீர் வர வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்ததால் தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

Tap to resize

இருப்பினும், குடும்ப படத்தை பார்க்க வேண்டும் என திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்களுக்கு நிறைவான படம் பார்த்த சந்தோஷத்தை கொடுத்ததாகவும் சிலர் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் மீண்டும் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மூன்றாவது வாரத்தை 'அண்ணாத்த' எட்டியுள்ள எட்டியுள்ள நிலையில், உலக அளவில் இப்படம் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஏற்கனவே 15 நாட்களில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.228 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இந்த வார இறுதியில், ரூ.250 கோடியை எட்டும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் ரூ.142.05 கோடி 'அண்ணாத்த' வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வருடத்தில் 200 கோடி கிளப்பில் மிக வேகமாக வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. தல அஜீத் குமாரை வைத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ..

Latest Videos

click me!