எந்த நடிகரிடமும் காணாத ஏதோ ஒன்றை ரசிகர்கள் ரஜினியிடம் கண்டனர். அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிக் கொண்டாடினர். இதயத்தில் இடம் கொடுத்து இன்பம் உற்றனர். அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்து உற்சாகப்படுத்தினர். வில்லன், ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன், அப்புறம் சூப்பர் ஸ்டார் என தனது நடிப்பு திறமையால் திரையுலகை ஆட்கொண்ட அசாத்திய மனிதர் இவர். வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் ஒன்னவிட்டு போகல என்று படையப்பா படத்தில் ஒரு வசனம் வரும், அதற்கு ஏற்ப அவரின் வயது ஏற ஏற அவரின் இளமையும், எனர்ஜியும், வசீகரமும் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. திரைத்துறையில் தன் பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.