2021ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் கல்யாணம், குழந்தை பேறு, நிச்சயதார்த்தம் என நல்ல செய்திகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் காதலர் தினத்தன்று பிரபல சீரியல் நடிகை மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக். செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.
சன் டிவி, ஸ்டார் விஜய், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல்வேறு முன்னணி தொடர்களில் நடித்திருக்கும் இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் வெளியான ராஜா ராணி சீரியலில் மிரட்டல் வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் காதலர் தினத்தன்று புகைப்படத்துடன் வெளியிட்ட நல்ல செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறக்க உள்ளதை தெரிவித்துள்ளார்.
4 மாத கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நல்ல செய்தி சொன்ன ஸ்ரீதேவி மற்றும் அவருடைய காதல் கணவருக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.