"ராஜா ராணி" படத்தில் ஆர்யாவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!

First Published | Sep 23, 2020, 11:58 AM IST

ராஜா ராணி படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு பதில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் தற்போது, விஜய், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களை இயக்க துவங்கிவிட்ட இயக்குனர் அட்லீயை ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குனராக அறிமுகம் செய்த திரைப்படம் என்றால் அது 'ராஜா ராணி' திரைப்படம் தான்.
2013 ஆண்டு வெளியான இந்த திரைப்படம் , இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'மௌனராகம்' படம் போல் இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
Tap to resize

இந்நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் ஆர்யா நடித்த ஜான் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது, அட்லீயின் நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தானாம்.
பின்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம்.
இதை தொடர்ந்து தான், நடிகர் ஆர்யா இந்த படத்தில் கமிட் ஆகி நடித்தார். வெற்றி படத்திற்காக போராடி வந்த ஆர்யாவிற்கு இந்த படம் சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது.
மேலும் இந்த படத்தில் ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!