பாக்ஸ் ஆபிஸ் வின்னர் ‘தாய் கிழவி’ 3ம் நாள் வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Published : Mar 02, 2026, 08:30 AM IST

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் தாய் கிழவி திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Thaai Kizhavi Movie Box Office

கனா, கொட்டுக்காளி என பல தரமான படங்களை தயாரித்த சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு மாஸ்டர் பீஸ் படத்துடன் கம்பேக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் ஒரு வெற்றி கூட இல்லாமல் பிப்ரவரி மாதத்தில் தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு ஒரு பொக்கிஷமாக வந்த படம் தான் தாய் கிழவி. படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. முதல் நாளிலிருந்து திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக தாய் கிழவி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

24
வரவேற்பை பெறும் தாய் கிழவி

தாய் கிழவி திரைப்படத்தை சிவக்குமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். படம் பார்த்த அனைவரும் இது இவரின் முதல் படமா என கேட்கும் அளவுக்கு தரமாக இயக்கியிருப்பதாக பாராட்டி வருகின்றனர். இவரும் கமல்ஹாசனின் தீவிர ரசிகராம். இதனால் படத்தில் எக்கச்சக்கமான கமல் ரெஃபரன்ஸ் உள்ளது. குறிப்பாக சிங்கம்புலி கேரக்டரை கமலின் தீவிர ரசிகனாக காட்டியுள்ள விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அவரின் இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

34
வசூல் வேட்டையாடும் தாய் கிழவி

தாய் கிழவி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் திரைக்கு வந்த முதல் நாளே மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்திருந்தது. பின்னர் இரண்டாம் நாள் படத்தின் வசூல் டபுள் மடங்கு இருந்தது. சனிக்கிழமை அன்று தாய்க்கிழவி திரைப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இதனால் இரண்டே நாளில் 10 கோடி ரூபாய் வசூல் அள்ளி மாபெரும் சாதனை படைத்து இருந்தது தாய் கிழவி திரைப்படம். இப்படத்திற்கு பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளை ஓடி வருவதால் தியேட்டர் உரிமையாளர்களும் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.

44
3ம் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு?

இந்த நிலையில் தாய் கிழவி திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு நாட்களைக் காட்டிலும் மூன்றாம் நாளில் தான் இப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளி இருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வந்து இப்படத்தை பார்த்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் தாய் கிழவி திரைப்படம் அமோக வசூலை அள்ளிக் குவித்து மாஸ் காட்டியுள்ளது. இப்படம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மட்டும் ரூ.6 கோடிக்கு மேலும், உலகளவில் ரூ.8 கோடிக்கு மேலும் வசூலை வாரிக்குவித்து உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories