ஹோம்லி லுக்கில் கலக்கிய சினேகாவை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்படுகிறார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் குறைத்துக் கொண்ட சினேகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். தனது வசீகர கண்களாலும், மயக்கும் புன்னகையாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சிநேகாவின் தற்போதைய புகைப்பட தொகுப்பை பார்க்கலாம் வாங்க...