அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் பிரச்சனை..! பிரச்சாரத்தை தொடர்வாரா கமல்?

First Published Mar 20, 2021, 7:00 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், அடுத்தமாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தன்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த காலிலேயே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.
 

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த கையோடு, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ​அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
undefined
மேலும் மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். என தெரிவித்தார்.
undefined
ஜனவரி 18ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு, மறுநாள் நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அன்றைய தினம் கமலின் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரும் அப்பாவிற்கு நல்ல படியாக காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், மருத்துவர்கள் குழு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் இருந்தனர்.
undefined
சில தினங்கள் ஓய்வுக்கு பின்னர், மீண்டும்... அரசியல் பணிகளில் களமிறங்கினார் கமல். தற்போது, இவரது தேர்தல் அறிக்கை மற்றும் இவர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய கட்சிக்காகவும், ஆதரவு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராகவும் களம் காண்கிறார்.
undefined
தொடர்ந்து பல மணி நேரம், நின்று கொண்டே இருந்ததால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த அவரது கால் வீங்கி விட்டது என்றும், இதுகுறித்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
undefined
அறுவை சிகிச்சை செய்த காலில் வீக்கம் இருப்பதால், கமல்ஹாசன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் தனது பிரச்சாரத்தில் சில மாற்றங்கள் செய்யப்போவதாகவும், சில தினங்கள் ஓய்வு எடுத்த பின்னர் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
undefined
click me!