'என் தேனு முட்டாயே'..மார்கழி மாசத்து மழையே.. மகளை வாழ்த்தும் பிரச்சன்னாவின் பொருள் பொதிந்த கவிதை..

Kanmani P   | Asianet News
Published : Jan 26, 2022, 12:35 PM IST

நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா-சினேகாவின் மக்கள் சமீபத்தில் பிறந்தநாள் கண்டுள்ளார்.. அந்நாளில் மக்களுக்காக நடிகர் பிரசன்னா எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகி வருகிறது...

PREV
18
'என் தேனு முட்டாயே'..மார்கழி மாசத்து மழையே.. மகளை வாழ்த்தும் பிரச்சன்னாவின் பொருள் பொதிந்த கவிதை..
prasanna-sneha family

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

28
prasanna-sneha family

சூர்யா - ஜோதிகாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி சினேகா - பிரசன்னா தான்.

38
prasanna-sneha family

 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.

48
prasanna-sneha family

2015ம் ஆண்டு இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகாவிற்கு வேலைக்காரன் படம் மூலம் ரசிகர்கள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர்

58
prasanna-sneha family

இந்த படத்தில் நடித்து முடித்ததும், சில பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது. ஆனால்  சினேகா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். தனுஷுடன் 'பட்டாஸ்' படத்தை கர்ப்பமாக இருக்கும் போதே நடித்து முடித்த சினேகா பின்னர்  குழந்தையும் பெற்றெடுத்தார்.

68
prasanna-sneha family

மகளுக்கு தற்போது இரண்டு வயது ஆகிவிட்டதால், மீண்டும் பட வாய்ப்பை தேடி வரும் சினேகா, அவ்வப்போது கணவருடன் சேர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

78
prasanna-sneha family

தன்னுடைய கணவர், மகன், மகள் என அனைவருடனும் மிகவும் சந்தோஷமாக இந்த பொங்கலை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சினேகா.

88
prasanna-sneha family

பிரசன்னா-சினேகாவின் மகள் சமீபத்தில் பிறந்தநாள் கண்டுள்ளார்.. அந்நாளில் மக்களுக்காக நடிகர் பிரசன்னா எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகி வருகிறது... மகளின் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா..என் தேனு முட்டாயே!
மார்கழி மாசத்து மழையே,
என் சிரிக்கும் மத்தாப்பே!
வீட்டுல வளருற நிலவே,
என் செல்ல பொன்வண்டே!
வெல்ல கட்டி முத்தமே,
என் உசுரு மொத்தமே!
சாமியே செஞ்ச தவமே!மகளே!
நீ வாழு நூறு யுகமே❤❤ இவ்வாறு வாழ்த்து மடல் எழுதியுள்ளார்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories