பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் 3 நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள சயின்ஸ்-ஃபிக்ஷன் ரொமான்டிக் படம்தான் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' ஆகிய படங்கள் தொடர்ச்சியாக 100 கோடி கிளப்பில் இணைந்து, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
25
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
இதில் 'லவ் டுடே' படத்தை பிரதீப் அவர்களே இயக்கியிருந்தார். இதனால், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்களை ஒருசேரக் கவரும் ஒரு மாஸ் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் பார்க்கப்படுகிறார். பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், சுனில் ரெட்டி, சீமான், யோகி பாபு, கௌரி கிஷன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் மற்றும் சத்யன் சூர்யன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டுள்ளார்.
35
வசூல் நிலவரம்
இந்நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இப்படம் நேற்று மட்டும் அதிகபட்சமாக ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் 7.70 கோடி வசூலித்த இப்படம் வெளிநாடுகளில் 3 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன் மூலம் மூன்று நாட்கள் முடிவில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 26.29 கோடி வசூலித்துள்ளது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. ஓவர்சீஸில் இப்படத்திற்கு முதல் மூன்று நாட்களில் ரூ.8.30 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 3 நாட்கள் முடிவில் ரூ.34.59 கோடி வசூலை குவித்துள்ளது இப்படம்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரண்டு படங்களோடு ஒப்பிடுகையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வசூலில் 26 சதவீதம் பின்னடவை சந்தித்து உள்ளது. அப்படங்கள் முதல் மூன்று நாட்களிலேயே 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிட்டன. ஆனால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் மூன்று நாட்கள் ஆகியும் 50 கோடியை நெருங்கவில்லை. வார நாட்கள் தொடங்கிவிட்டதால், இன்று முதல் வசூல் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் நாளை தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் அது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கு பூஸ்ட் ஆக அமைந்துள்ளது.
55
100 கோடி அடிக்குமா?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு, ஒருவழியாக ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்தது. பிரதீப்பின் முந்தைய மூன்று படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாக சற்று சராசரியான வரவேற்பு மட்டுமே கிடைத்திருக்கிறது. இப்படம் 100 கோடி வசூலித்து பிரதீப்பின் நான்காவது 100 கோடி வசூல் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.