பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

Published : Feb 23, 2025, 09:32 AM IST

Dragon Box Office Collection Day 2 Report : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் டிராகன் 2ஆவது நாளில் மட்டும் உலகளவில் ரூ.15.4 கோடி வசூல் குவித்துள்ளது.

PREV
16
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

Dragon Box Office Collection Day 2 Report : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கயாடு லோகர் ஆகியோர் பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் தான் டிராகன். பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் தனது காதலை வெளிப்படுத்தும் போது அந்த பெண் தனக்கு நன்றாக படிக்கும் பையனை விட ரௌடித்தனம் செய்யக் கூடிய பையனைத் தான் பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறாள். இதனால் கல்லூரிக்கு சென்று கடி அடிப்பது, ரௌடித்தனம் செய்வது, மோசமாக படிப்பது என்று எல்லா வேலையும் செய்து கடைசியில் 48 அரீயர் வைக்கும் நிலைக்கு வருகிறார் ஹீரோ.

26
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த ஹீரோவை ஹீரோயினும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார். கல்லூரி முடிந்த பிறகு எந்த வேலைக்கும் போகாத ஹீரோ வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் பெற்றோரை ஏமாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் தன்னை உயிருக்கு உயிராக காதலித்த ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் ரூ.1,20,000 சம்பளம் வாங்கும் வேறொரு பையனை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வருகிறார்.

36
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

இதனால், ஏமாற்றம் அடைந்த பிரதீப் ரூ.1,20,001 சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்காக டிகிரி முடித்தது போன்று அந்த 48 அரியரையும் எழுதி பாஸ் செய்தது போன்று போலி சான்றிதழ் பெற்று ஒரு கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். அந்த கம்பெனி அவருக்கு ரூ.1,30,000 சம்பளம் கொடுக்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை மாறுகிறது. கயாடு லோகருடன் திருமண நிச்சயதார்த்தமும் முடிகிறது. அப்போது தான் எதிர்பாராத விதமாக கல்லூர் முதல்வர் பிரதீப் ரங்கநாதனை சந்தித்து அவரது கம்பெனிக்கு வருகிறார்.

46
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

இதையடுத்து உண்மையாக அவர் அந்த 48 பேப்பரையும் எழுதி முடித்தாரா? அதே கம்பெனியில் மீண்டும் வேலை கிடைத்ததா? கயாடு லோஹருடன் திருமணம் நடந்ததா என்பது தான் டிராகன் படத்தோட மீதி கதை. படம் வெளியானது முதல் எந்தவித குறையும் இல்லாமல் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு படத்தின் கதையும் காட்சிகளும் அமைந்திருக்கிறது. ஆனால், என்ன, தவறான முறையில் போலி சான்றிதழ் பெற்று அதன் மூலமாக அவர் சந்திக்க கூடிய பிரச்சனைகளை நேர்மறையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

56
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

உலகம் முழுவதும் வெளியான டிராகன் படம் முதல் நாளில் ரூ.11.2 கோடி வசூல் குவித்துள்ளது. வளர்ந்து வரும் புதுமுக ஹீரோவின் படம் இத்தனை கோடி குவிப்பது என்பது இதுவே முதல் முறை. இது அவருடைய 2ஆவது படம். லவ் டுடே படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் திரைக்கு வந்து பல சாதனைகளை படைத்தது. இதே போன்று தான் டிராகன் படமும் வித்தியாசமான கதையுடன் திரைக்கு வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

66
பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வரும் பிரதீப் – டிராகன் 2ஆவது நாளில் ரூ.15.4 கோடி வசூல்!

முதல் நாளில் ரூ.11.2 கோடி வசூல் குவித்த நிலையில் 2ஆவது நாளான நேற்று இந்தப் படம் உலகளவில் ரூ.15.4 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.10.25 கோடி வசூல் குவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.26.6 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் ரூ.16 கோடி வசூல் குவித்துள்ளது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories