லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ச்சியாக மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்ததாக லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. லவ் டுடே படத்தின் மூலம் முதல் படத்திலேயே 100 கோடி வசூல் அள்ளிய முதல் ஹீரோ என்கிற சாதனையையும் படைத்தார் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
24
ஹாட்ரிக் ஹிட் அடித்த பிரதீப்
லவ் டுடே-வுக்கு பின் பிரதீப் நடிப்பில் வெளிவந்த படம் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. இப்படம் ரூ.151 கோடி வசூலித்து பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப்பின் டியூட் படம் ரிலீஸ் ஆனது. அப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிரதீப்புக்கு ஹாட்ரிக் ஹிட்டாக அமைந்தது.
34
விலை போகாத லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
பொதுவாக ஒரு ஹீரோ அடுத்தடுத்து ஹிட் கொடுத்தால், அவரின் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸ் ஆகும் படத்துக்கு மவுசு அதிகரிக்கும். இதனால் அப்படத்தின் பிசினஸும் பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் பிரதீப்புக்கு அது அப்படியே தலைகீழாக நடக்கிறது. அவர் தொடர்ச்சியாக மூன்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தும் அவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை வாங்க ஆள் இல்லையாம். இதுவரை அதன் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமம் விற்கப்படவில்லையாம்.
ப்ரீ ரிலீஸ் பிசினஸ் முடியாவிட்டாலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை வருகிற டிசம்பர் 18-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாமலே திரைக்கு வரும் இப்படம் ஹிட்டானால் அதன் ரிலீசுக்கு பின் ஓடிடி, சாட்டிலைட் இரண்டும் நல்ல விலைக்கு விற்கப்படும். அதே நேரம் படம் சொதப்பினால், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை இப்படம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.